நவம்பர் 8-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவி காலம் முடிவடைய இன்னும் 100 நாட்களே உள்ளது. இந்நிலையில் ஒபாமாவின் பதவிக்கால முடிவடைவதற்குள் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் அமெரிக்க தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் புதிய அதிபர், பதவியேற்ற முதல் 100 நாட்களுக்குள் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் எனவும், இருநாடுகளிடையேயான நட்புறவை பலப்படுத்திக் கொள்வதற்கு இது மிக முக்கியம் எனவும் அமெரிக்காவின் முன்னணி கொள்கை அமைப்புக்கள் பரிந்துரைத்துள்ளன. பொறுப்பேற்க இருக்கும் புதிய நிர்வாகம் இந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு உறவை பலப்படுத்த சில அடிப்படை ஒப்பந்தங்களை இந்தியாவுடன் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


மேலும் புதிய அரசு, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்த பேச்சுவார்த்தை பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகள் தொடர்பான பிரச்னைகளை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும். எழுச்சியான நடவடிக்கைகள் மூலம் வலிமையான தலைவராக உருவெடுத் துள்ள மோடியுடன் நட்பை பலப்படுத்திக் கொள்வது ஆசிய பசிபிக் உறவை  நிலைப்படுத்திக் கொள்ள முடியும் என சிஎஸ்ஐஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.