புதுதில்லி: புதிய தலைவரை தேர்வு செய்யும் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி 2019 மக்களவை தேர்தலை சந்தித்தது. அதில் தமிழகம் மற்றும் கேரளா தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் படுதோல்வியை சந்தித்தது. மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி வெறும் 54 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றது. இதனால் எதிர்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால் அவரது ராஜினாமாவை கட்சி மேலிடம் ஏற்கவில்லை. தனது முடிவில் உறுதியாக இருந்த ராகுல், பதவியை ராஜினாமா செய்தார். 


சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை கூட்டத்தொடரில் கட்சிக்கு தலைவரே இல்லாமல் கூடத்தில் பங்கேற்றது காங்கிரஸ். இது பெரும் விவாததுக்கு உள்ளானது. அடுத்த தலைவரை தேர்ந்த்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் மேலிடம் உள்ளது.


காங்கிரஸ் கட்சியின் யார் அடுத்த தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்த நிலையில், இன்று புதிய தலைவரைத் தேர்வு செய்ய காங்கிரஸ் காரியக் கமிட்டி டெல்லியில் கூடியது. 


இந்த கூட்டத்தில் சோனியாகாந்தி, பிரியங்கா, அகமது பட்டேல், ஏகே.அந்தோணி, ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். முன்னதாக இந்த தலைவர்கள் தனித்தனியாக கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி புதிய தலைவராக யாரை தேர்வு செய்வது என்று விவாதித்துள்ளனர். 


இன்றையக் கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்போகிறது? கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? யார் புதிய தலைவர்? என்ற பல கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. 


இந்நிலையில், புதிய தலைவரை தேர்வு செய்யும் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸ் செயற்குழு (சி.டபிள்யூ.சி) கூட்டத்தில் இருந்து உடனடியாக கிளம்பி விட்டார்கள். 


இதுக்குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு புது தலைவர் தேர்வு செய்வதில் எங்களின் தாக்கமும் இருக்க கூடாது. நாங்கள் இல்லாமேலே நடப்பது தான் நல்லது என்று சோனியாகாந்தி கூறினார்.