மும்பை மீனவர்களை மீட்க புதிய உபகரணம்! விமானம்!
மும்பையில் உள்ள மீனவர்களை மீட்க 9 கப்பல்கள், 3 விமானம் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ‘ஓகி‘ புயல் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை,மும்பை, திருவனந்தபுரம் மற்றும் கேரளாவின் கடலோர மாவட்டங்களிலும் ஏராளமான மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
இந்த புயல் கேரளாவை கடந்து பின்னர் அரபி கடல் வழியாக அங்கிருந்து லட்சத் தீவை நோக்கி சென்றது. அப்போது மணிக்கு 80 கிலோ மீட்டர் வேக காற்றுடன் பலத்த மழை கொட்டியது.
அவர்கள் புயலில் சிக்கி மாயமானதாக அவர்களின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், ஒக்கி புயலில் சிக்கி மாயமான 952 மீனவர்கள் மராட்டிய மாநிலத்தில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என முதல்வர்தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது ஓகி புயல் லட்சத்தீவில் இருந்து மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. இந்த புயல் தீவிரமடைந்து வடகிழக்கு பகுதியை நோக்கி திரும்பி உள்ளது.
கடந்த 5 நாட்களாக கடுமையாக புயல் சூழ்ந்து வருகிறது. ஒகி புயல் காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் போக்குவரத்துக்கு நெறிசல் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.
கடற்படை மற்றும் கடலோரக் காவர் படையினர் பாதிக்கபட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஒகி புயலால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர் 96 பேர் காணவில்லை, திருவனந்தபுரத்தில் உள்ள கடற்படை மற்றும் கடலோரக் காவலர்கள் மூலம் 357 மீனவர்கள் உட்பட 690 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
குறைந்தது தற்போது வரை புயல் காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர், இந்நிலையில், இந்திய கடலோர காவல்படையினர் மீனவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இதற்கிடையில், 68 படகுகள் மகாராஷ்டிரா கடற்கரைக்கு வந்துள்ளன, இதில் இரண்டு படகுகள் தமிழ்நாட்டிலிருந்து மீதம் கேரளாவிலிருந்து வந்தவை ஆகும், "என அவர் கூறினார்.
இதை தொடர்ந்து தற்போது மும்பையில் உள்ள மீனவர்களை மீட்க 9 கப்பல்கள், 3 விமானம் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் இந்திய கடலோர காவல்படையினருக்கு வழங்ப்பட்டுள்ளது.
மேலும், கடலோர காவல்படையின் மாவட்ட தலைமையகம் மும்பையில் உள்ள கோயினிலும்-கவரத்திலும் சிக்கியிருந்த மீனவர்களுக்கு உதவிகள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.