உத்தரப்பிரதேசத்தில் நியூ ஃபரக்கா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


உத்தர பிரதேச மாநிலம் ஹர்சந்த்பூர் ரயில் நிலையம் அருகே நியூ ஃபரக்கா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 6 பெட்டிகள் தடம்புரண்டதில் தற்போது வரை 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 



 


லக்னோ மற்றும் வாரணாசியில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளும்படி மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.


இந்நிலையில் விபத்து தொடர்பாக தகவல்களை அறிந்துக் கொள்ள இந்திய ரயில்வே உதவி எண்களை அறிவித்து உள்ளது. 


 



 


தீனதயாள் உபாத்தியாயா சந்திப்பு -BSNL-05412-254145, Railway- 027-73677.  பட்னா ரயில் நிலையத்தின் அவசர உதவி எண்கள் அறிவிப்பு:- BSNL-0612-2202290, 0612-2202291, 0612-220229, Railway Phone No.- 025-83288