பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க புதிய திட்டம்: மத்திய அமைச்சர் விளக்கம்
பெட்ரோல், டீசல் விலைகள் வரும் நாட்களில் குறையும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலும் சர்வதேச சந்தையை சார்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் நிர்ணிக்கப்படுகிறது. பெட்ரோல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதனால் அடுத்த சில நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இரண்டு முதல் மூன்று ரூபாய் வரை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுக்குறித்து இந்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க சுத்திகரிப்புத் திறனை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்மூலம் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் கொண்டு வர முடியும். எண்ணெய் சுத்திகரிப்பு அதிகரிப்பதன் மூலம், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தாலும், அதன் தாக்கம் இந்தியாவில் ஏற்ப்படாமல் பார்த்துக்கொள்ளலாம் என மத்திய அமைச்சர் கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஜனவரி 2 ம் தேதி அதன் விலையில் மாற்றமில்லை. ஜனவரி 1 ம் தேதி, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 17 மெட்ரிக் டன்னாக குறைக்கப்பட்டன. இன்று டெல்லியில் பெட்ரோல் விலை ரூ. 68.65 மற்றும் டீசல் விலை ரூ. 62.66 ஆகா உள்ளது. அதேபோல சென்னையில் பெட்ரோல் விலை ரூ. 71.22 மற்றும் டீசல் விலை ரூ. 66.14 என்ற விலையில் விற்கப்படுகிறது.
மேலும் கொல்கத்தாவில் பெட்ரோல் விலை ரூ. 70.78 மற்றும் டீசல் விலை ரூ. 64.42 ஆகும். மும்பையில் பெட்ரோல் விலை ரூ. 74.30 மற்றும் டீசல் விலை ரூ. 65.56 ஆகா உள்ளது.