இந்த மாத தொடக்கத்தில் ரூ .12,000 கோடி நேரடியாக 6 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்ட போது புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக பாரத பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத்: ஒவ்வொரு துளி நீருக்கும் அதிக அறுவடை என்ற குறிக்கோளுடன் சாகுபடி மேற்கொள்ள வேண்டும் என்று குஜராத் காந்திநகரில் உலக உருளைக்கிழங்கு மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி கூறியுள்ளார். நீர்ப்பாசனத்தில் அறிவியல், தொழில்நுட்ப அணுகு முறைகளை மேற்கொள்ளை பிரதமர் வலியுறுத்தியுள்ளார். 


"இந்த மாத தொடக்கத்தில், ஆறு கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ .12000 கோடியை நேரடியாக மாற்றுவதன் மூலம் ஒரு புதிய சாதனை படைக்கப்பட்டது" என்று பிரதமர் மோடி கூறினார்.


வீடியோ கான்பரன்சிங் மூலம் குஜராத்தில் மூன்றாவது உலகளாவிய உருளைக்கிழங்கு கான்க்ளேவை உரையாற்றிய பிரதமர் மோடி, விவசாயிகளின் கடின உழைப்பு மற்றும் அரசாங்க கொள்கைகளின் காரணமாக சில உணவு தானியங்கள் மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது என்றும் கூறினார்.



"2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பல முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது விவசாயிகள் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் அரசாங்கக் கொள்கையின் கலவையாகும். தானியங்கள் மற்றும் பிற உற்பத்தியில் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது என உணவு பொருட்கள் மாநாட்டில் மோடி கூறினார்.