புதிய வருமான வரி சட்டங்களை ஏற்படுத்துவதற்கான சரியான நேரம் இது: வருவாய்த்துறை செயலர்
டாக்ஸ் இந்திய ஆன்லைன் (TIOL) அறிவு அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் வருவாய் செயலாளர் தருண் பஜாஜ், நாட்டில் புதிய வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நேரம் வந்து விட்டது என்கிறார்.
டாக்ஸ் இந்திய ஆன்லைன் (TIOL) அறிவு அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் வருவாய் செயலாளர் தருண் பஜாஜ், நாட்டில் புதிய வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நேரம் வந்து விட்டது என்கிறார்.
நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு 10 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும் என்ற எடுக்கப்பட்ட முடிவு குறித்து வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
2019-20ல் நீண்ட கால மூலதன ஆதாய வரியில் 95,000 கோடி ரூபாய் பெறப்பட்டது. இதில் 92 சதவீதம் ஆண்டு வருமானம் ரூ.15 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் செலுத்தியுள்ளனர். 80 சதவீதம் வரியை ஆண்டு வருமானம் ரூ.50 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் செலுத்தியுள்ளனர். உலகம் முழுவதும் 20-30 சதவீத வரியை நோக்கி நகரும் போது, நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு 10 சதவீத வரியை எப்படி நியாயப்படுத்த முடியும்,” என்று சனிக்கிழமை புது தில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பஜாஜ் கூறினார்.
மேலும் படிக்க | உடல் பருமனை பிரச்சனையை தடுக்க 'Fat Tax'; NITI ஆயோக்கின் திட்டம் என்ன..!!
விதிகளை எளிமையாக்க புதிய வரிச் சட்டம் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். " வருமான வரி சட்டம் 1860ம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டது, பின்னர் இரண்டாவது முறையாக 1900 களின் முற்பகுதியில் கொண்டு வரப்பட்டது. மூன்றாவது வருமான வரி சட்டம் 1961 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. தற்போது, ஒரு புதிய வரி சட்டத்தை உருவாக்குவதற்கான சரியான நேரம்," எனவும் வருவாய் செயலாளர் கூறினார்.
சமீபத்திய வரலாற்றில் வரி விதிகளை மாற்றியமைக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் அவர் கூறினார். இம்முறை வரிச் சட்டங்களை மாற்றி எழுத நேர்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
மேலும் படிக்க | WhatsApp விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கும் டாப் 5 அம்சங்கள்
நாட்டில் உள்ள சிக்கலான வரி விதிகளைப் பற்றி பேசுகையில், பஜாஜ், நாட்டில் வரிச் சட்டங்கள் சிக்கல்களுக்கு அதிகாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் தவறு தான் முழுமையான காரணம் என கூற இயலாது; அவ்வப்போது வரிவிலக்கு கேட்கும் பல்வேறு தரப்பினரின் தவறும் கூட என்றார். மேலும், "இந்த கோரிக்கைகளில் சிலவற்றை அரசாங்கம் ஏற்க வேண்டும்," என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
வரிச் சட்டங்களை எளிமையாக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள்/வணிகங்களுக்கு வழங்கப்படும் பல்வேறு வரி விலக்குகளை அகற்ற, வரி வல்லுநர்கள் மற்றும் வரி செலுத்துவோர் ஆதரவை வழங்குமாறு வருவாய்ச் செயலர் அழைப்பு விடுத்தார்.
வெவ்வேறு சொத்து பிரிவுகளுக்கான மூலதன ஆதாய வரிக்கான வெவ்வேறு விதிகளைப் பற்றி பேசுகையில், வெவ்வேறு சொத்துக்களுக்கு வெவ்வேறு காலகட்டங்கள் மற்றும் வரி விகிதங்கள் விதிக்கப்படுவதில் எந்த வித மான நியாயமான காரணமும் இல்லை என்றார்.
தொழில்துறையினரும், வரித்துறையினரும் பல்வேறு விதிவிலக்குகளை நீக்குமாறும் கோருவதற்கு பதிலாக, புதிய விலக்குகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்கள் என அவர் கூறினார்.
பழைய வரி சட்டங்கள் நீக்கப்பட்டு, தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற புதிய வரி விதிப்பு முறை அமலுக்கு வர வேண்டும் எனவும் அந்த வரி விதிப்பு முறை என்பது வரி விலக்குகள் அல்லாத, குறைந்த வரி விதிப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | மல்டிமீடியா ட்வீட்களில் உள்ளடக்க எச்சரிக்கையை சேர்ப்பது எப்படி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR