கொரோனா பரவலால் உலகமே பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில், அனைவரும் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்ட் 73 நாட்களில் விற்பனைக்கு வரும் என்றும், தேசிய நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வழங்கப்படும் எனவும் செய்தி வெளியானது.


சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா ( Serum Institute of India -SII) கொரோனாவிற்கான தடுப்பு மருத்தை தயாரித்து வருகிறது.


தற்போது, ​​தடுப்பு மருந்தை உற்பத்தி செய்வதற்கும் எதிர்கால பயன்பாட்டிற்காக அதை சேமித்து வைப்பதற்கும் தான் அரசு தங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது”,  என COVID-19 தடுப்பு மருந்தை தயாரிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் கூட்டு சேர்ந்துள்ள SII ஒரு அறிக்கையில் கூறியது.


ஊடகங்களில்  கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்ட்  குறித்த வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானவை மற்றும் கற்பனையானவை என தடுப்பு மருந்தை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) ஞாயிற்றுக்கிழமை தெளிவுபடுத்தியது. 


கோவிஷீல்ட் 73 நாட்களில் விற்பனைக்கு வரும் என்றும், தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின்  கீழ் இந்தியர்கள் இலவசமாக தடுப்பூசி போடப்படுவார்கள் என்றும் ஊடகங்களீல் செய்தி வெளியானதை அடுத்து மருந்து நிறுவனம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது


சோதனைகள் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட பிறகு, தேவையான அனைத்து விதிமுறைகளை பூர்த்தி செய்த பின் ஒப்புதல்கள் கிடைத்ததும் கோவிஷீல்ட் விற்பனைக்கு வரும்  என சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா கூறியுள்ளது. 


ALSO READ | கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 69,239 பேருக்கு கொரோனா பாதிப்பு..!


ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா (Oxford-AstraZeneca) தடுப்பு மருந்து மூன்றம் கட்ட பரிசோதனையில் உள்ளது. தடுப்பு மருந்தின் நோயெதிர்ப்பு தன்மை மற்றும் செயல்திறன் நிரூபிக்கப்பட்டவுடன், SII அதிகாரப்பூர்வமாக அதனை உறுதிப்படுத்தும் ”, என SII மேலும் கூறியது.


ALSO READ | இன்னும் 73 நாட்களில் கொரோனா தடுப்பூசியை இலவசமாக பெரும் இந்தியா..!