காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை தேசிய புலனாய்வு அமைப்பு கைது இன்று செய்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற பிரிவினைவாத அமைப்பை நடத்தி வந்தவர் யாசின் மாலிக். இந்த அமைப்பின் சட்டவிரோத செயல்பாடுகளால், அந்த அமைப்புக்கு தடை விதித்து மத்திய அரசு.


கடந்த மாதம் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை டெல்லி அழைத்து வரப்பட்ட யாசின் மாலிக், என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 


மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனரான மறைந்த முஃப்தி முகமது சயீதின் மகள் ருபய்யா சயீது கடந்த 1989ம் ஆண்டில் கடத்தப்பட்டார். இதேபோல் 1990ம் ஆண்டில் இந்திய விமானப்படை வீரர்கள் 4 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த 2 சம்பவங்கள் தொடர்பாகவும் யாசின் மாலிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த அனுமதி கோரி, ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்துள்ளது. அதன் மீதான தீர்ப்பை ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.