கர்நாடகாவின் ஷிவமோக்கா மாவட்டத்தில் ஐஎஸ்ஐஎஸ் சதி வழக்கு தொடர்பாக 9 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நேற்று முதல் துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. என்ஐஏ, அதன் துணை குற்றப்பத்திரிகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் எதிர்காலத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கான திறன்களை எடுக்க, ரோபோடிக்ஸ் படிப்புகளை தொடர திட்டமிட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

என்ஐஏவின் படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஷிவமொக்காவில் IED குண்டுவெடிப்பை நடத்தியதுடன், பல இடங்களில் உளவு பார்த்தது மற்றும் மக்கள் மத்தியில் பயங்கரவாதத்தை பரப்புவதற்காக சொத்துக்கள் மற்றும் வாகனங்களை தீ வைப்பதில் ஈடுபட்டது, இஸ்லாமிய அரசு (ISIS) சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவில் பயங்கரவாதம் மற்றும் வன்முறை சம்பவங்களை அகற்றி இந்தியாவுக்கு எதிராக போரை நடத்த திட்டமிட்டிருந்தனர்.


அனைவரும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள்


குற்றம் சாட்டப்பட்டவர்கள் முகமது ஷாரிக் (25), மாஸ் முனீர் அகமது (23), சையத் யாசின் (22), ரீஷான் தாஜுதீன் ஷேக் (22), ஹுசைர் ஃபர்ஹான் பெய்க் (22), மசின் அப்துல் ரஹ்மான் (22), நதீம் அகமது கே ஏ (22), ஜபியுல்லா (32), நதீம் பைசல் என் (27) ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். இவர்கள் உபா சட்டப்பிரிவு உல்பட பல பிரிவுகளின் குற்றஞ்சாட்டப்பட்டனர். zeenews.india.com/tamil/india/anna-bhagya-scheme-in-karnataka-state-government-distribute-cash-instead-of-rice-451822


மேலும் படிக்க | மனதில் ஈரம் இல்லாத மனிதர்கள்... பற்றி எரிந்த பேருந்தை அலட்படுத்திய வாகன ஓட்டிகள் - 25 பேர் பலி!


மாஸ் முனீர் அகமது மற்றும் சையத் யாசின் ஆகியோர் முன்பு இந்தாண்டு மார்ச் மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டனர். இப்போது அவர்கள் மற்ற குற்றங்களுக்காக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது பேரில், மாஸ் முனீர் அகமது, சையத் யாசின், ரீஷான் தாஜுதீன் ஷேக், மசின் அப்துல் ரஹ்மான் மற்றும் நதீம் அகமது கே.ஏ ஆகியோர் இயந்திரவியல் மற்றும் மின் பொறியியல் படித்தவர்கள்.


ரோபோடிக்ஸ் படிக்க ஆணை


"இந்தியாவுக்கான ஐஎஸ் அமைப்பின் செயல்திட்டங்களை மேம்படுத்துவதற்காக, எதிர்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களைச் செயல்படுத்தும் திறன்களைப் பெறுவதற்காக, ரோபாட்டிக்ஸ் படிப்புகளைத் தொடர, வெளிநாட்டைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் கையாளுநரால் அவர்கள் பணிக்கப்பட்டனர்," என குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


முகமது ஷாரிக், மாஸ் முனீர் அகமது மற்றும் சையத் யாசின் ஆகிய மூவரும் வெளிநாடுகளில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் இயக்கத்தின் வழிகாட்டுதலின் பேரில் பயங்கரவாதம் மற்றும் வன்முறையை ஊக்குவிக்க குற்றவியல் சதித்திட்டம் தீட்டியதாக என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.


கடந்தாண்டு வழக்குப்பதிவு


நாட்டின் தேசிய பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் இறையாண்மையை சீர்குலைக்கும் நோக்கத்துடன் மூவரும் தீவிரமாக தீவிரவாதிகளை இணைத்து குற்றவாளிகளை பணியில் சேர்த்துள்ளனர். இந்த வழக்கில் என்ஐஏ விசாரணையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கிரிப்டோகரன்ஸிகள் மூலம் ஐஎஸ் அமைப்பில் இரு்து நிதியளித்துள்ளனர். 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி ஷிவமொக்கா ஊரக காவல்துறையால் முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி என்ஐஏவால் கையகப்படுத்தப்பட்டு மீண்டும் பதிவு செய்யப்பட்டது. வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


மேலும் படிக்க | மூன்றாவது முறையாக மோடி... 543 தொகுதியும் இலக்கு - பாஜகவின் பிளான் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ