புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும்  நிலையில், ஏப்ரல் 30 வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை டெல்லியில் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. திங்களன்று புதிதாக 3,548 பேர் பாதிக்கப்பட்டு, 15 பேர் இறந்ததைத் தொடர்ந்து டெல்லி அரசு இரவு ஊரட்டங்கு போடுவதற்கான முடிவை எடுத்தது. டெல்லியில் இதுவரை கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 11,096 ஆகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக ஒரு உத்தரவை பிறப்பித்த தில்லி அரசு, பேருந்துகள், டெல்லி மெட்ரோ, ஆட்டோக்கள், டாக்சிகள் மற்றும் பிற பொது போக்குவரத்து முறைகள் இரவு ஊரடங்கிலிருந்து விலக்கு பெற்றவர்களை மட்டுமே அழைத்துச்செல்ல அனுமதிக்கப்படும் என்று கூறியது. இருப்பினும், அத்தியாவசிய சேவைகளை வழங்கும் துறைகளுக்கு இரவு ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. டெல்லி அரசாங்கத்தின் உத்தரவு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பொருந்தாது.


"மாநிலங்களுக்கு உள்ளே மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான இயக்கம் / அத்தியாவசிய / அத்தியாவசியமற்ற பொருட்களின் போக்குவரத்துக்கு எந்த தடையும் இருக்காது. இதுபோன்ற இயக்கங்களுக்கு தனி அனுமதி / இ-பாஸ் தேவையில்லை ”என்று தில்லி அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.


ALSO READ: ஒரே நாளில் 96982 பேர் தொற்றால் பாதிப்பு: பீதியில் மக்கள், பதட்டத்தில் அரசாங்கங்கள்


எனினும், இரவு ஊரடங்கு உத்தரவின் போது, ​​போக்குவரத்து நடமாட்டம் நிறுத்தப்படாது என்றும், தடுப்பூசிகளுக்குச் (Vaccination) செல்வோர் இ-பாஸ் மூலம் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
மேலும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் நபர்களுக்கும், ரேஷன், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பால் மற்றும் மருந்துகளுக்காக பயணிக்க வேண்டிய சில்லறை விற்பனையாளர்களும் இதேபோன்ற பாஸுடன் அனுமதிக்கப்படுவார்கள். அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களின் பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி அளிக்கப்படும். 


மேலும், தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்கள் இரவு ஊரடங்கின் (Night Curfew) போது அடையாள அட்டைகளுடன் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சிகிச்சை தேவைப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இரவு ஊரடங்கின்போது விலக்கு அளிக்கப்படும். 


டெல்லியில் COVID-19 இன் நான்காவது அலை தற்போது உள்ளது என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார். ஆனால் முழுமையான லாக்டௌன் பற்றி இன்னும் பரிசீலிக்கப்படவில்லை. "தற்போதைய சூழ்நிலையின்படி, லாக்டௌனை விதிக்க நாங்கள் பரிசீலிக்கவில்லை. நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். பொது மக்களுடனான முறையான ஆலோசனைக்குப் பின்னரே, தேவைப்பட்டால் லாக்டவுன் பற்றிய முடிவு எடுக்கப்படும்” என்று முதல்வர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.


ALSO READ: 24 மணி நேரத்தில் 93,000 பேருக்கு கொரோனா தொற்று: அவசர கூட்டத்தைக் கூட்டினார் பிரதமர் மோடி


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR