லக்னோ: உ.பி. மாநிலத்தில் உள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் இரு பிரிவினரிடையே ஏற்ப்பட நில பிரச்சனை மோதலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலி, பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) நிலப்பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் சோன்பத்ரா மாவட்டத்தின் முராட்டியா கிராமத்தில் நடந்ததுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு கிராமப் பிரதான் நடத்தியதாகவும், இறந்தவர்களில் ஆறு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என்று ஜீ மீடியாவிடம் அந்த பகுதி மக்கள் தெரிவித்தன. சர்ச்சைக்குரிய நிலத்தை விவசாயத்திற்கு பயன்படுத்துவது தொடர்பாக கிராமவாசிகளுக்கும் கிராம பிரதான்க்கும் (ஊர் தலைவர்) இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.


இந்த சம்பவம் நிலப்பிரச்சனை தொடர்பாக நடந்ததாக சோன்பத்ரா மாவட்ட மாஜிஸ்திரேட் (டி.எம்) அங்கித் குமார் அகர்வால் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் இறந்த ஒன்பது பேர் மற்றும் காயம் அடைந்தவர்களும் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என ANI செய்தி ஊடகத்திடம் கூறினார். மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து முழுமையாக தகவல்கள், இறந்த உடல்களை ஏற்றிச் செல்லும் அனைத்து ஆம்புலன்சுகளும் மருத்துவமனைக்கு வந்த பின்னரே சரியான இறப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியும் என்று டி.எம். கூறினார்.


 



இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை தனிப்பட்ட முறையில் கண்காணித்து, சம்பவத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரபிரதேச காவல்துறையின் தலைமை இயக்குனர் ஓ.பி.சிங்கிற்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.