புது டெல்லி: திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்பயாவின் நான்கு குற்றவாளிகளின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு நாளும் சுமார் 50 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. அவர்களை தூக்கிலிட நீதிமன்றம் மரண உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து இந்த செலவு தொடங்கியது. ஒவ்வொரு முறையும் 32 பாதுகாப்புக் காவலர்கள் செல்லுக்கு வெளியே நிறுத்தப்படுவதோடு, அவர்களைத் தூக்கிலிட பல வேலைகளும் செய்யப்படுவதால், இந்த பணம் செலவிடப்படுகிறது. பாதுகாப்புக் காவலர்களை ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை மாற்றப்பட்டு செல்லுக்கு வெளியே நிற்கவைக்கப்பட்டு, குற்றவாளிகள் மீது 24 மணி நேரமும் கண்களை வைத்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நான்கு கொலைகாரர்களும் திகாரின் சிறை எண் -3 ல் தனித்தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு குற்றவாளியின் செல்லுக்கு வெளியே இரண்டு பாதுகாப்பு காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் வீரர் மற்றும் திகார் சிறை நிர்வாகத்தைச் சேர்ந்தவரும் ஆவார்கள். அந்த காவலர்களுக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாது என்பது தகவல்.


தற்கொலை அல்லது ஓடிவிடுவார்கள் என எச்சரிக்கை:
இந்த காவலர்களுக்கு ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஓய்வு அளிக்கப்படுகிறது. காவல் வீரர்களை மாற்றுவதில் மற்ற காவலர்கள் பயன்படுத்தப் படுகிறார்கள். ஒவ்வொரு கைதிக்கும் 24 மணி நேரம் எட்டு பாதுகாப்பு காவலர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். அதாவது நான்கு கைதிகளுக்கு மொத்தம் 32 பாதுகாப்பு காவலர்கள். அவர்கள் 24 மணி நேரத்தில் 48 ஷிப்டுகளில் வேலை செய்கிறார்கள்.


மரண உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் அவர்கள் தனித்தனியாக அல்லாமல் மற்ற கைதிகளுடன் சேர்த்து வைக்கப்பட்டு இருந்ததாக சிறை அதிகாரிகள் கூறுகின்றனர். மரண உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, இவர்கள் தற்கொலை முயற்சியோ, சிறையிலிருந்து தப்பிக்க முயற்சியோ செய்யாமல் இருக்கவும், தூக்கிலிடப்படுவதற்கு முன்பு அவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வேறு எந்த செயலையும் செய்யக்கூடாது என்பதற்காக, ஒவ்வொரு இரண்டு மணி நேர ஷிப்டிலும் இரட்டை காவலரை நிறுவுவதோடு, சி.சி.டி.வி கேமராக்களிலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது என்றார்.


பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்கு:
பிப்ரவரி 1 ஆம் தேதி நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிடப்பட உள்ளார்கள். அதற்கு முன்பாக ஜனவரி 30 அன்று அவர்களைத் தூக்கிலிட சோதனைகளையும் நடத்த உள்ளனர். குற்றவாளிகளான பவன் மற்றும் வினயின் குடும்பத்தினர் இருவரையும் சிறையில் சந்தித்தனர்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.