புது டெல்லி: 2012 டெல்லி பாலியல் கும்பல் (Nirbhaya Case) வழக்கில் நான்காவது குற்றவாளி பவன் குமார் குப்தா உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். மார்ச் 3 ம் தேதி தூக்கிலிடப்படுவதற்கு முன்பு, பவன் குப்தா தனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இந்த தகவலை பவன் குப்தாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங், நீதிமன்றத்தில் தெரிவித்தார். தனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குற்றவாளி பவன் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளதாக அவர் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரை தூக்கிலிட விசாரணை நீதிமன்றம் மார்ச் 3 ம் தேதி மரண உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மார்ச் 2 ஆம் தேதிக்கு முன்பே, அதாவது அடுத்த திங்கட்கிழமைக்குள் உச்சநீதிமன்றம் இந்த மனுவை விசாரித்து தள்ளுபடி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையெனில் பவனின் வழக்கறிஞர்கள் மார்ச் 3 ம் தேதி நிறைவேற்றப்பட வேண்டிய மரண உத்தவை நிறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கோருவார்கள்.


இருப்பினும், பவனின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும், அதனை அடுத்து ஜனாதிபதியிடம் கருணை மனுவை தாக்கல் செய்ய சட்டப்பூர்வ உரிமை குற்றவாளிக்கு உள்ளது. சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர், கருணை மனு தொடர்பாக ஜனாதிபதி ஒரு முடிவுக்கு வர மூன்று நான்கு நாட்கள் ஆகும்,. இதன் காரணமாக இந்த மார்ச் 3 ம் தேதி மரண உத்தரவை நிறைவேற்றுவது என்பது சந்தேகம் தான். எனவே மார்ச் 3 க்கு பிறகு மற்றொரு புதிய மரண உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிகிறது. 


இந்த வழக்கில் மீதமுள்ள மூன்று குற்றவாளிகள் அக்‌ஷய், வினய் மற்றும் முகேஷின் சீராய்வு மனுக்கள் மற்றும் கருணை மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கருணை மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து முகேஷ் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். பவன் இதுவரை சீராய்வு மனுவை தாக்கல் செய்யவில்லை, இப்போது அவர் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு முறையிட்டுள்ளார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.