₹30,000 கோடி மதிப்பிலான ராணுவ தொழில் வழித்தட திட்டம்...
₹30,000 கோடி மதிப்பிலான ராணுவ தொழில் வழித்தட கட்டமைப்பு வசதிகளை தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையே பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவங்கி வைத்தார்!
₹30,000 கோடி மதிப்பிலான ராணுவ தொழில் வழித்தட கட்டமைப்பு வசதிகளை தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையே பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவங்கி வைத்தார்!
தமிழக ராணுவ தொழில் வழித்தடத்தை நேற்று (ஜனவரி 20) திருச்சியில் வரும் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவங்கி வைத்தார். சென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த துவக்க விழாவில் புதிய முதலீடுகள், புதிய ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் பற்றிய அறிவிப்புகள் இடம்பெற்றன. அதேபோல கோயம்புத்தூரில் ராணுவ தளவாட கண்டுபிடிப்புகளுக்கான கேந்திரமும் அன்றைய தினமே தொடங்கப்பட்டது.
இந்த புதிய ராணுவ தொழில் வழித்தட கட்டமைப்பு வசதிக்காக ₹3,038 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரன்டன்ஸ் பேக்டர், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் முறையே ₹2,305 கோடி, ₹140.5 கோடி மற்றும் ₹150 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்துள்ளன.
தனியார் நிறுவனங்கள் டி.வி.எஸ், டேட்டா பேட்டர்ன்ஸ் மற்றும் ஆல்ஃபா டிசைன்கள் முறையே ₹50 கோடி, ₹75 கோடி மற்றும் ₹100 கோடி ரூபாய் முதலீடு செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.