Rozgar Mela Scheme Benefits: மத்திய அரசின் “ரோஜ்கார் மேளா” திட்டத்தின் கீழ் இன்று நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக சேர்க்கப்பட்ட 71,000 பணி நியமன ஆணைகளை காணொலி வாயிலாக பிரதமர் மோடி வழங்கினார். அதுமட்டுமில்லாமல் நாடு முழுவதும் சுமார் 45 இடங்களில் மத்திய அமைச்சர்கள் நேரடியாகக் கலந்து கொண்டு பிரதமர் மோடியின் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு 71 ஆயிரம் பயனாளிகளுக்கு பணி ஆணைகளை நேரில் வழங்கினார்கள். அந்தவகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சுமார் 250 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார். அப்பொழுது “ரோஜ்கார் மேளா”வின் கீழ் பணி நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்ட பயனாளிகளிடம், “ரோஜ்கார் மேளா” திட்டத்தின் பலன்களைப் பற்றி பொதுமக்களிடம் பரப்புமாறு வேண்டுகோள் விடுத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தபால் துறை, ரயில்வே, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், பெட்ரோலியம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மத்திய அமைச்சர் வழங்கினார். சென்னை தி.நகரில் நடைபெற்ற பிரதமரின் ரோஜ்கார் வேலைவாய்ப்பு மேளா முகாமில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். 250 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 



ரோஜ்கார் வேலைவாய்ப்பு மேளாவின் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான ஒரு படி ரோஜ்கார் மேளா திட்டம் என்று கூறினார். ரோஜ்கார் மேளா திட்டத்தின் பலன்களை உங்கள் குடும்பத்திற்கு வெளியே உள்ள அனைவருக்கும் எடுத்துக் கூறுங்கள். மேலும் அவர்களையும் வாழ்க்கையில் முன்னேறச் செய்யுங்கள்" என்று புதிதாக பணியமர்த்தப்பட்ட பயனாளிகளிடம் கூறினார்.


மேலும் படிக்க: பொதுமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட், கேஸ் சிலிண்டருக்கு மானியம்: அரசு புதிய அறிவிப்பு


ரோஜ்கார் மேளா திட்டம் என்பது அதிக வேலை வாய்ப்புகளுக்கான முக்கிய பாலமாக செயல்படுகிறது. இளைஞர்களை மேம்படுத்துகிறது மற்றும் தேசிய வளர்ச்சியில் அவர்கள் தீவிரமாக பங்கேற்க உதவுகிறது என்றார். இந்த நிகழ்வின் போது, சீதாராமன் பயனாளிகளுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.



நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஆட்கள், ரயில்வே மேலாளர், ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் மூத்த வணிக மற்றும் டிக்கெட் கிளார்க் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணி அமர்த்தப்படுவார்கள். பல்வேறு அரசுத் துறைகளில் புதிதாக நியமனம் செய்யப்படுபவர்களுக்கு 'கர்மயோகி பிரரம்ப்' என்ற ஆன்லைன் நோக்குநிலைப் பாடத்தின் மூலம் அவர்கள் பயிற்றுவிப்பார்கள்.


முன்னதாக ரோஜகர் மேளா நிகழ்ச்சிக்காக தமிழகம் வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


மேலும் படிக்க: பாஜக அலுவலகத்தில் புகுந்த நல்ல பாம்பு: தொண்டர்கள் ஓட்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ