Richest Beggar In Pakistan: பிச்சைக்காரர்கள் குறித்து உங்கள் யாரிடமாவது கேட்டால் உங்கள் நினைவுக்கு வருவது அவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்தவர்கள் என்பதாகதான் இருக்கும். அது உண்மையும் கூட... ஆதரவற்ற நிலையில், அடிப்படை பணியை மேற்கொள்ள இயலாத சமூகத்தின் விளிம்புநிலை மக்களான பிச்சைக்காரர்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் வியாபித்து இருக்கின்றனர். அதேபோல், மேற்சொன்ன இந்த கருத்துகளுக்கு முற்றிலும் மாறுபட்ட பிச்சைக்காரர்களும், விதிவிலக்குகளாக மிக மிக சொற்ப எண்ணிக்கையில் உள்ளனர். அந்த வகையில் பாகிஸ்தான் நாட்டின் பெரும் சொத்து மதிப்புடைய பிச்சைக்காரர் ஒருவர் குறித்து இங்கு காணலாம்.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் நாளுக்கு நாள் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு சென்று வருகிறது. பாகிஸ்தானில் பணவீக்கம் தினந்தினம் அதன் உச்சத்தை தொட்டு வருவதால், அங்குள்ள மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கே அதிக விலையை கொடுக்க வேண்டிய துயர நிலையில் உள்ளனர். இந்த நிலையில் இருந்து மீள பாகிஸ்தான் அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
பாகிஸ்தானின் அம்பானி
இருப்பினும், பாகிஸ்தான் அரசு தனது கடன்களை செலுத்த அண்டை நாடுகளிடம் உதவி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பணவீக்கம் மற்றும் அதன் விளைவால் ஏற்பட்ட விலைவாசி உயர்வால் மக்களிடம் போதுமான வருமானமும், சேமிப்பும் இன்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள ஒரு பிச்சைக்காரரின் வருமானம் உங்களை மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும். இந்த கடினமான சூழலிலும் அதிக வருமானம் பெறும் அந்த பிச்சைக்காரர் யார் என்பது குறித்து இதில் காணலாம்.
மேலும் படிக்க | FD முதலீடுகளுக்கு அதிக வட்டி வழங்கும் HDFC வங்கி... சான்ஸை மிஸ் பண்ணாதீங்க...!!
இவரை பாகிஸ்தானின் அம்பானி என்றே கூறலாம். அந்தளவிற்கு அவரிடம் சொத்துகள் இருக்கின்றன. அதாவது அவரின் சொத்துக்களின் கோடிகளில் உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்... அந்தளவிற்கு அவருக்கு வருமானம் உள்ளது. அவரின் குழந்தைகள் பெரிய பெரிய பள்ளிகளில் படித்து வருகின்றனர். அவருக்கு மருத்துவ காப்பீடு சுமார் 1 கோடி ரூபாய்க்கு உள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஷௌகத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?
பாகிஸ்தானின் அந்த பணக்கார பிச்சைக்காரரின் பெயர் ஷௌகத் பிகாரி என கூறப்படுகிறது. இவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் நகரத்தில் வசித்து வருகிறது. இவர் தினமும் 1000 ரூபாயை பெறும் அளவிற்கு யாசகம் பெறுவார் என கூறப்படுகிறது. அந்த வகையில், ஷௌகத்தின் சொத்து மதிப்பு 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 17 லட்ச ரூபாய் அளவில் இருந்ததாக பாகிஸ்தானின் உயர்ந் வரி பெறும் ஏஜென்சியான ஃபெடரல் போர்டு ஆப் ரெவன்யூ (FBR) தெரிவித்திருந்தது.
முல்தான் நகரில் உள்ள மிகவும் சொகுசான, வசதி படைத்த பள்ளியில் ஷௌகத்தின் குழந்தைகள் கல்வி பயில்கின்றனர். மேலும், பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பில் அவரின் குழந்தைகளுக்கும் 1 கோடி ரூபாய் மருத்துவ காப்பீடு செய்துள்ளார். மேலும் அவரது நிதி நிலைமை குறித்து அடிக்கடி சமூக வலைதளத்திலும் தகவலை பகிர்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
பாகிஸ்தானின் ஷௌகத் போல், இந்தியாவிலும் இதுபோன்ற பணக்கார பிச்சைக்காரர்கள் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக மும்பை மாநகரில் தனது இளம் வயதில் இருந்து யாசகம் பெற்று வரும் பாரத் ஜெயின் என்பவருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 7 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன. இவர் சுமார் 40 வருடத்திற்கும் மேல் யாசகம் பெற்று வருகிறார்.
மேலும் படிக்க | பணி ஓய்வுக்கு முன்னரே NPS மூலம் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்: பட்டியல் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ