கடுமையாகும் சட்டம்: 2019 மோட்டார் வாகன (திருத்த) மசோதா மக்களவையில் தாக்கல்
மோட்டார் வாகன (திருத்த) மசோதா 2019 மசோதாவை மக்களவையில் அமைச்சர் நிதின் கட்கரி நேற்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்தார். இன்று அதன் மீது விவாதம் நடைபெற உள்ளது.
புதுடெல்லி: மோட்டார் வாகன (திருத்த) மசோதா 2019 மசோதாவை மக்களவையில் அமைச்சர் நிதின் கட்கரி நேற்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்தார். இந்த மசோதா குறித்து மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார்.
இந்தியாவில் 1939 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் முதன்முறையாக 1988 ஆம் அண்டு மோட்டார் வாகனச் சட்டத்தில் சில மாறுதல் செய்யப்பட்டது. அதன் பின்னர் கடந்த மோடி தலைமையிலான மத்திய அரசு சில மாறுதல்களை செய்து மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா 2017 ஆம் ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப் பட்டது. ஆனால் மாநிலங்களவையில் எதிர்ப்பு எழுந்ததையடுத்து தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட்டது. தேர்வுக் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு மீண்டும் மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனாலும் அப்பொழுது சூலில் மசோதா நிறைவேற்றப்படவில்லை.
இந்தநிலையில், 2019 மோட்டார் வாகன (திருத்த) மசோதாவை மக்களவையில் அமைச்சர் நிதின் கட்கரி நேற்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்தார். அதில் போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது.