புதுடெல்லி: ஐக்கிய ஜனதா தள (JD(U)) தலைவர் நிதீஷ்குமாரை தலைவராக தேர்ந்தெடுத்த என்.டி.ஏ (NDA) ஒருமனதாக தேர்வு செய்தது. நிதீஷ்குமார் நாளை பீகார் முதலமைச்சராக பதவியேற்பார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிகார் தேர்தலின் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 15) ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமாரை தனது தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்தது. என்டிஏ தலைவராக முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிதீஷ் குமார் பீகார் மாநிலத்தின் அடுத்த முதல்வராக இருப்பார். பாஜக தலைவர் சுஷில் மோடி தேசிய ஜனநாயக கூட்டணியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


பாட்னாவில் உள்ள ஆளுநர் இல்லத்தில் திங்கள்கிழமை (நவம்பர் 16) காலை 11:30 மணிக்கு நிதீஷ் குமார் மாநில முதலமைச்சராக பதவியேற்பார். பீகார் முதல்வராக நிதீஷ் குமார் நான்காவது முறை பதவியேற்கிறார். பாட்னாவில் மூத்த தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பீகாரில் என்டிஏ தலைவராக நிதீஷ் குமார் அறிவிக்கப்பட்டார்.


முன்னதாக, நிதீஷ்குமார் பீகார் சட்டமன்றத்தை கலைத்து, தனது ராஜினாமாவை ஆளுநர் பாகு சவுகானிடம் (Phagu Chauhan) ஒப்படைத்துவிட்டார்.


சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில், பாஜக 74 இடங்களையும், ஜே.டி.-யு 43 இடங்களையும், மற்ற இரண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் எட்டு இடங்களையும் வென்றனர். மொத்தமாக என்.டி.ஏ 125 இடங்களை வென்றது. 


இது 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மை எண்ணிக்கையை விட மூன்று எம்.எல்.ஏக்கள் அதிகம் ஆகும். தேஜாஷ்வி யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி 75 இடங்களைக் கொண்ட மிகப்பெரிய ஒற்றை கட்சியாக உருவெடுத்தது. எதிர்க்கட்சி கூட்டணி 110 இடங்களை வென்றது.



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR