அதிகரிக்கும் உயிர் பலி; இதுவரை 239 பேர் இறப்பு; பீகார் அரசின் நிலை என்ன?
கடந்த 2 வாரங்களில் பீகாரில் கிட்டத்தட்ட 239 இறப்புகள் பதிவாகியுள்ளன
புதுடில்லி: பீகாரில் நடைபெற்று வரும் உயிரிழப்பை பார்த்தால், பீகார் மாநிலத்தின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது என்று கூறலாம். மாநிலத்தின் பெரிய பெரிய அரசு மருத்துவமனைகளின் நிலை என்னவென்றால், நீங்கள் ஒரு அரைமணி நேரம் அங்கு இருந்தால், உங்கள் இதயம் நடுங்கிவிடும். அப்படி ஒரு சூழ்நிலை பீகார் மாநிலத்தில் ஏற்ப்பட்டு உள்ளது.
கடந்த 2 வாரங்களில் பீகாரில் கிட்டத்தட்ட 239 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 126-க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் ஆவார்கள். பீகாரில் கிட்டத்தட்ட ஐந்து முதல் ஆறு மாவட்டங்கள் குளோமரூலேட்டிங் காய்ச்சல் மற்றும் அதிக வெப்பம் காரணமகவும் குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாகிறது. இதுவரை புள்ளிவிவரங்களின்படி, 126 குழந்தைகள் இறந்துள்ளனர். அதே நேரத்தில், அதிக அனல் காரணமாக 113 பேர் இறந்துள்ளனர். எனவே, இரண்டு வாரங்களில் 239 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஔரங்காபாத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 50ஐ அடைந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில், மத்திய அமைச்சர் முதல் மாநில அரசு அமைச்சர்கள் வரை தொடர்ந்து வருகை தருகின்றனர். நோயாளிகளின் நிலை குறித்து கேட்டறிந்து வருகின்றனர். ஆனால் அவர்கள் மருத்துவமனைகளில் அடிப்படை குறைபாடுகளை பற்றி அமைச்சர்கள் யாரும் எதுவும் பேசவில்லை. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை.
மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் அளித்து வருகிறது. மாநில அரசும் பல ஏற்பாடுகள் சிறப்பாக செய்து வருகிறது. ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால், பல மருத்துவமனைகளில் மருந்துகளின் பற்றாக்குறை உள்ளது. அதேபோல மருத்துவர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது, முறையான சிகிச்சை அளிப்பதற்கு தேவையான உபகரணங்கள் இல்லை என்பதே உண்மை நிலவரம்.
அதே நேரத்தில், கேள்வி என்னவென்றால், மாநிலத்தில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக இந்த காய்ச்சல் குறித்த நோய்க்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க அரசாங்கம் ஏன் தவறிவிட்டது. இப்போது கூட இந்த சம்பவத்துக்கு காரணமாக நோயைப் பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ள ஒரு வருட கால அவகாசம் கோருகிறது அரசாங்கம்.
இந்த நோய் இன்று பரவவில்லை. பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. கடந்த வருடம் மரணம் குறைவாக இருந்தது. ஆனால் இந்த முறை அது அதிகரித்துள்ளது என்பது கவலைக்குரியது என்று முதல்வர் நிதீஷ்குமாரே கூறியுள்ளார்.
2014 ஆம் ஆண்டில், இந்த நோயின் காரணமாக 355 பேர் இறந்தனர் என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறோம்.