பீகார் மாநில முதல்வராக இன்று மீண்டும் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வராக பாஜகவின் சுசில் குமார் மோடி பதவியேற்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரான நிதிஷ் குமார் பீகார் மாநிலத்தின் முதல்வராக நீடித்து வந்தார். துணை முதல்வராக லாலுவின் மகன் தேஜஸ்வி இருந்து வந்தார்.


இந்நிலையில் தேஜஸ்வி மீது மோசடி வழக்கை சிபிஐ பதிவு செய்து இருந்தது. இதனால் தேஜஸ்வியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அழுத்தம் கொடுத்து வந்தார் நிதிஷ் குமார். ஆனால், இதை தேஜஸ்வி மறுத்த நிலையில், நிதிஷ்குமார் திடீரென நேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவருக்கு ஆதரவு கொடுக்க பாஜக முன் வந்தது.


இந்த நிலையில் இன்று முதல்வராக நிதிஷ்குமாரும், துணை முதல்வராக சுசில் குமார் மோடி பதவியேற்றனர்.