கடந்த மாதம் எதிர்க்ட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்காக நடந்த கூட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் புறக்கணித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது நாளை நடைபெறும் துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தையும் புறக்கணிக்க பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளார்.


ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு, எதிர்க்கட்சிகள் புறக்கணித்து ஜிஎஸ்டி அறிமுக விழாவில் தனது பிரதிநிதியை கலந்து கொள்ள செய்தது போன்ற நிதிஷ்குமாரின் அடுத்தடுத்த செயல்பாடுகளால் லாலு - நிதிஷ் இடையேயான கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 


இந்நிலையில் துணை ஜனாதிபதியை வேட்பாளரை தேர்வு செய்யும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தையும் நிதிஷ் புறக்கணிக்க உள்ளார். 


நாளை துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு கூட்டத்தை நடத்த எதிர்க்கட்சிகள் முடிவ செய்துள்ள நிலையில், தனது கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களை அழைத்து பாட்னாவில் முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்த நிதிஷ் திட்டமிட்டுள்ளார்.


நிதிஷ் குமாரின் இக்கூட்டத்தில் துணை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, சிபிஐ.,யின் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் லாலுவின் மகனும் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவை தனது அமைச்சரவையில் வைத்திருக்க வேண்டுமா என்பது குறித்து இக்கூட்டம் முக்கியமாக நடத்தப்படுவுதாக கூறப்படுகிறது.