டெல்லி எய்ம்ஸ், சப்தர்ஜங் மருத்துவமனைகள் உள்பட நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: தேசிய மருத்துவ ஆணையம் (NMC) மசோதாவுக்கு எதிரான அதன் எதிர்ப்பை தீவிரப்படுத்திய அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) மற்றும் தேசிய தலைநகரில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனை மருத்துவர்கள் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.


மக்களவையில் 2019 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையம் (NMC) மசோதா நிறைவேற்றப்படுவதை எதிர்த்து இந்திய மருத்துவ சங்கம் (IMA) 24 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. மருத்துவ சமூகத்தின் பரவலான எதிர்ப்புகளுக்கு மத்தியில், மக்களவை திங்களன்று மசோதாவை நிறைவேற்றியது, சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இதை நரேந்திர மோடி அரசாங்கம் மேற்கொண்ட மிகப்பெரிய சீர்திருத்தங்களில் ஒன்றாகும். இதையடுத்து, இந்த மசோதாவுக்கு எதிரான பொது ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்றது. சில மருத்துவர்களும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர் என்று IMA தெரிவித்துள்ளது. 


இந்நிலையில், மருத்துவ ஆணைய மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. முக்கிய மருத்துவமனைகளின் வேலைநிறுத்தம் காரணமாக புறநோயாளிகள் சிகிச்சைகள், மற்றும் அவசர கால மருத்துவ சேவைகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.


நாட்டின் மருத்துவக் கல்வியில் பொதுவான தரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு அவசரமாக மருத்துவக் கவுன்சில் சட்டத்தைத் திருத்துவதாக மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் மருத்துவக் கல்வியில் இடம்பெறுவதைத் தடுக்கவும் இச்சட்டம் பயன்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை திணிப்பதாக மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி கடந்த திங்கட்கிழமை இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.