நாடு முழுவதும் நிலவும் கடும் வறட்சி காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பல விவசாயிகள் தற்கொலையும் செய்துக் கொண்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே விவசாயிகள் வங்கி கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக விவசாயிகள் உட்பட நாட்டின் பிற மாநிலங்களும் விவசாயிகளும் தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், விவசாயிகளின் நலனை கருதி, அவர்களின் விவசாய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்யுமா? என்ற எதிர் பார்க்கப் பட்டது. 


இதுகுறித்து மத்தியமைச்சர் அருண்ஜெட்லியிடம் கேட்டப்போது, அவர் கூறியது,


நிதி பற்றாக்குறையை சீரமைப்பது உள்ளிட்டவற்றிலேயே மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. கடன் தள்ளுபடி குறித்து கடந்த வாரம் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவித்தேன். எனவே விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது என்ற பேச்சுக்கே இடம் இல்லை. 


மாநில அரசுகளின் விவசாயக்கடன் ரத்து அறிவிப்பு தொடர்பாக நான் எதுவும் கூற விரும்பவில்லை. விவசாய கடன்களை ரத்து செய்யும் மாநில அரசுகள், அதற்கான நிதி ஆதாரங்களை அவர்களே திரட்டிக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது என அருண்ஜெட்லி தெரிவித்தார். 


உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.