பாரத் ரத்னா விருது வழங்கப்படுவது குறித்து யாருடைய பெயரையும் பரிந்துரைக்க அவசியம் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீர் சாவர்கருக்கு பாரத ரத்னா வழங்கப்படும் என்று கூறியிருந்த பாஜகவின் தேர்தல் பிரச்சரத்தை தொடர்ந்து, பல கட்சிகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சாவர்கருக்கு பாரத ரத்னா வழங்குவதில் யாருடைய பரிந்துரையும் தேவையில்லை என்று கூறியுள்ளமத்திய உள்துறை அமைச்சகம், அதற்கான காலவரிசை பற்றிய எந்த அறிவிப்பையும் இதுவரை  முன்வைக்கவில்லை. 


மகாராஷ்டிரா மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது, தேர்தலில் வெற்றி பெற்றால், இந்தியாவின் விடுதலைக்காக அயராது போராடிய, வீர் விநாயக் தாமோதர் சாவர்கர் எனப்படும் வீர் சாவர்க்கருக்கு  பாரத் ரத்னா வழங்கப்படும் என்ற வாக்குறுதியை முன்வைத்திருந்தது பாரதிய ஜனதா கட்சி. இதற்கு காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் உட்பட பல அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தன. 


இதை தொடர்ந்து, தேர்தலில் வெற்று பெற்றுள்ள போதும், சிவசேனாவுடனா கருத்து வேறுபாட்டினால், ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பாஜக. இதனிடையில், அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்காக தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கும் சிவசேனா, பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போது குறிப்பிட்டிருந்த வீர் சாவர்கருக்கான பாரத ரத்னா விருதை ரத்து செய்வதாக பொதுவான குறைந்தபட்ட திட்டத்தில் குறிப்பிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.


இந்நிலையில், வீர் சாவர்கருக்கு பாரத் ரத்னா வழங்குவதற்கு யாருடைய பரிந்துரையும் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். எனினும், விருது வழங்குவதற்கான எந்த ஒரு கால வரையறையும் அமைச்சகம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.