புதுடெல்லி: கோவிட்-19 தடுப்பூசி போட வேண்டும் என எந்தவொரு நபரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (மே 2, 2022) கூறியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

“தடுப்பூசி போட  வேண்டும் என எந்தவொரு தனிநபரையும் கட்டாயப்படுத்த முடியாது. எனினும் தற்போதைய தடுப்பூசி கொள்கை நியாயமற்றது எனவும் கூற இயலாது என்பதில் நீதிமன்றம் திருப்தி அடைகிறது," என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


"அரசாங்கம் கொள்கையை உருவாக்கி,  பொது நலனை கருத்தில் கொண்டு சில நிபந்தனைகளை விதிக்கலாம்," என்று நீதிமன்றம் மேலும் கூறியது.


குடிமக்களுக்கு வலுக்கட்டாயமாக தடுப்பூசி போடுவதாகவும், கோவிட்-19 தடுப்பூசி  தொடர்பான மருத்துவ பரிசோதனை தரவுகள் மற்றும் தடுப்பூசிக்குப் பிந்தைய தரவுகளை வெளியிடக் கோரியும் டாக்டர் ஜேக்கப் புலியேல் தாக்கல் செய்த பொதுநல மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு கூறியுள்ளது.


நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ், தடுப்பூசி கொள்கை தொடர்பாக, அமைப்பு ரீதியான சுயாட்சி மற்றும் ஒருமைப்பாடு பாதுகாக்கப்படுகிறது என கருத்து தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | கொரோனா 4ம் அலை தொடங்கிவிட்டதா; வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்


தற்போதைய கோவிட்-19 தடுப்பூசி கொள்கை தன்னிச்சையானது மற்றும் நியாயமற்றது என்று கூற முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. "கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருக்கும் வரை, பொருத்தமான உத்தரவுகளைப் பின்பற்றப்பட வேண்டும். தடுப்பூசி போடப்படாத நபர்களுக்கு பொது இடங்களுக்கு செல்வதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படாது" என்று உச்ச நீதிமன்ற பிரிவு கூறியது.


சில மாநில அரசுகள் விதித்துள்ள நிபந்தனைகளில், தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு பொது இடங்களுக்குச் செல்வதைக் கட்டுப்படுத்தும் நிலையில், தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பதையும் உச்ச நீதிமன்றம் எடுத்துரைத்தது.


கோவிட்-19 தடுப்பூசியின் பாதகமான விளைவுகள் குறித்த தகவல்களை பொதுவில் வெளியிடுமாறும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.


இதற்கிடையில், இந்தியாவில் திங்களன்று 3,157 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன என மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் கூறுகின்றன. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 19,500 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26 இறப்புகள் பதிவாகிய நிலையில், இறப்பு எண்ணிக்கை 5,23,869 ஆக உயர்ந்துள்ளது. நாடு ஒரு நாளில் 2,723 பேர் குணமடைந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது.


நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,38,976 ஆக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.22 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பூஸ்டர் டோஸ்: 18+ வயதினருக்கு அனுமதி; தடுப்பூசி கட்டணம் மற்றும் பிற விபரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR