டெல்லியில் IPL போன்ற போட்டிகளுக்கு தடை விதிக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: நாட்டில் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், IPL உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை நடத்த தடை விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து நீச்சல் குளங்களும் மூடப்படுவதாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 


மேலும், கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுக்து வருவதாகவும், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) உள்ளிட்ட எந்த ஒரு மக்கள் கூடும் விளையாட்டு போட்டிகளையும், டெல்லி அரசு நடத்த அனுமதிக்காது என அவர் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் அதிக அளவு கூடும் விளையாட்டு நடவடிக்கைகள், கருத்தரங்குகள், மாநாடுகள் இங்கு ஏற்பாடு செய்யப்படாது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் ஒருவருக்கொருவர் இடைவெளியை பராமரிக்குமாறு மக்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.



கொரோனா வைரஸ் பாதிப்பால் மார்ச் 31 ஆம் தேதி வரை நகரத்தில் உள்ள அனைத்து பொது நீச்சல் குளங்களையும் உடனடியாக மூடுமாறு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக டெல்லி அரசின் சுகாதாரத் துறை வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்திருந்தது. மக்கள் பயன்படுத்தும் அனைத்து ஹோட்டல் மற்றும் பிற நிறுவனங்களின் நீச்சல் குளங்கள் மூடப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.


மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதலை அடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வியாழக்கிழமை அனைத்து திரையரங்குகளும் மார்ச் 31 வரை மூடப்படும் என்று அறிவித்ததாக ANI தெரிவித்துள்ளது. தில்லி அரசாங்கமும் கொரோனா வைரஸை ஒரு தொற்றுநோயாக அறிவித்தது குறிப்பிடதக்கது.