சுங்கச்சாவடியில் 3 நி.மி., காத்திருந்தால் கட்டணம் செலுத்த வேண்டாம்!
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்த தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த வழக்கறிஞர் சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விளக்கத்தில் இந்த தகவல் வெளியானது.
மத்திய அரசு கொடுத்த அளித்த விளக்கத்தில்:-
”சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணம் வரி இல்லை என்றும் மாறாக அது சேவை கட்டணமாகவே வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் வாகனத்தில் காத்திருந்தால் சுங்க கட்டணம் செலுத்த அவசியமில்லை” என தெரிவித்துள்ளது.