புதுடெல்லி: ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000  நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள், வங்கிகளில் முடங்கி கிடக்கிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கிகளில் பணத்தை மாற்றியவர்களே மீண்டும் வருவதால் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் பொது மக்களின் கையில் அழியாத மை தடவப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவர் ஒருமுறை மட்டுமே வங்கிகளில் பணத்தை மாற்ற முடியும்.


பணம் மாற்ற வரும் பொதுமக்கள் கை விரலில் அழியாத மை தடவுவதன் மூலம் ஒருவர் ஒரு முறை மட்டும் தான் வங்கியில் கொடுத்து பணத்தை மாற்ற முடியும்.


வங்கிகளுக்கு செல்லும் போது ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்தால் போதுமானது.  அடையாள அட்டை விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டியது இல்லை.


வங்கிகளுக்கு செல்லும் போது விண்ணப்ப படிவம் இனி தேவையில்லை. ஒரு வங்கியில் பணம் மாற்றி விட்டு இன்னொரு வங்கிக்கு சென்று பணத்தை மாற்ற இயலாது. பணம் மாற்றுபவர்களுக்கு தனி வரிசையும், வங்கி கணக்கில் பணம், காசோலை செலுத்த வருபவர்கள், பணம் எடுக்க வருபவர்கள் ஒரு வரிசையும் நிற்க வேண்டும்.


இத்திட்டம் மூலம் பணம் மாற்ற வருபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.