விஸ்ட்ரான் நிறுவனத்திற்கு புதிய ஆர்டர்கள் கொடுக்கப்பட்டாது: ஆப்பிள் நிறுவனம்
விஸ்ட்ரான் நிறுவனத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக, இந்தியாவில், வர்த்தகத்தை விரிவாக்குவது தொடர்பான ஆப்பிள் நிறுவனத்தின் திட்டங்களுக்கு சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோலார் மாவட்டத்தில் தைவான் நாட்டை சேர்ந்த விஸ்ட்ரான் நிறுவனத்தின் ( Wistron Corporation) தொழிற்சாலை அமைந்துள்ளது.
இந்த மாதம் 12ம் தேதி, தொழிலாளர்கள் நடத்திய வன்முறை தாக்குதலில், நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
விஸ்ட்ரான் நிறுவனத்தின் (Wistron Corporation) உள்ளே இருந்த கம்ப்யூட்டர், கண்ணாடி கதவுகள், டிவி உள்பட அனைத்தையும் ஊழியர்கள் அடித்து சேதப்படுத்தினர். நிறுவனத்தின் வாகனங்களுக்கும் தீவைத்து கொளுத்தினர்.
சம்பள பாக்கி மற்றும் பிற பிரச்சனைகள் காரணமாக ஆத்திரமடைந்த ஊழியர்கள் நிறுவனத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த ஆப்பிள் (Apple) நிறுவனம், விஸ்ட்ரான் நிறுவனம் நன்னடத்தை விதிகளை மீறியுள்ளது என தெரிவித்தது. பிரச்சனையை தீர்க்க முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை, புதிய ஆர்டர்கள் எதுவும் வழங்கப்பட மாட்டாது என ஆப்பிள் நிறுவனம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
பணியாளர்கள் அதிக நேரம் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், சம்பளமும் ஒழுங்காக வழங்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது
இந்த வன்முறை சம்பவம் காரணமாக, இந்தியாவில், வர்த்தகத்தை விரிவாக்குவது தொடர்பான ஆப்பிள் நிறுவனத்தின் திட்டங்களுக்கு சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் உள்ள இந்த விஸ்ட்ரான் தொழிற்சாலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஐபோன் (iPhone) மட்டுமல்லாமல் லெனோவோ (Lenovo), மைக்ரோசாப்ட் (Microsoft), போன்ற வேறு சில முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தேவையான உபகரணங்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ALSO READ | சம்பள பாக்கி பிரச்சனை: iPhone தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR