கொரோனா தொடர்ந்து நாட்டில் அழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய நோயால், ஏராளமான மக்கள் தங்கள் உயிர்களை இழந்து வருகின்றனர். இதற்கிடையில், மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் புதிய தகவல்களை வழங்கியுள்ளார். அதன்படி, கடந்த 7 நாட்களாக இந்தியாவில் உள்ள 180 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வரதன் கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாக்டர் ஹர்ஷ் வர்தன் (Harsh Vardhan) மேலும் கூறுகையில், கடந்த 14 நாட்களில் 18 மாவட்டங்களில் புதிதாக எந்த கொரோனா தொற்றும் (Coronavirus) கண்டறியப்படவில்லை. இது தவிர, 54 மாவட்டங்களில் 21 நாட்களாக புதிய கொரோனா தொற்று கண்டறியப் படவில்லை என்று கூறியுள்ளார்.


 



 


ALSO READ | கொரோனா தடுப்பூசி போட செல்பவர்களுக்கு UBER அளிக்கும் இலவச சவாரி: விவரம் இதோ!!


மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மருத்துவ உதவி அனுப்பப்படுகிறது
வெளிநாடுகளில் இருந்து தேவையான மருத்துவ உதவி மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் திறம்பட ஒதுக்கீடு செய்யப்படுவதை இந்திய அரசு உறுதி செய்து வருகிறது. இவற்றில், 2933 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 2429 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் (Oxygen Cylinder), 13 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள், 2951 வென்டிலேட்டர்கள் / பிஐ பிஏபி / சி பிஏபி மற்றும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ரெமிடிஸ்வீரின் குப்பிகளை இதுவரை விநியோகித்துள்ளன.


 



 


சுகாதார அமைச்சின் அறிக்கை
சில மாநிலங்கள் வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை விட அதிக அளவு தடுப்பூசிகளை (வேஸ்டேஜ் உட்பட) காட்டுகின்றன என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடுத்த மூன்று நாட்களில் 53 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி அளவைப் பெறும்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR