நான் பாஜகவிலிருந்து வெளியேற மாட்டேன் என்று முன்னாள் அமைச்சர் பங்கஜா முண்டே தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட பங்கஜா முண்டே தனது மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் பக்கத்திலிருந்து பாஜக என்ற கட்சியின் பெயரை நீக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவர் கட்சி மாற உள்ளதாக தகவல்கள் வெளியானது. 


இதனால் பங்கஜா முண்டே பாரதீய ஜனதாவில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைய கூடும் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதை பாரதீய ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மறுத்தார். 


இந்த நிலையில், நிருபர்களை சந்தித்த பங்கஜா முண்டே தான் பாஜகவில் இருந்து விலகி சிவசேனாவில் சேர உள்ளதாக வெளியான தகவல் வதந்தி என்று பங்கஜா முண்டே தெரிவித்துள்ளார். மேலும்  கட்சி தாவும் எண்ணம் தன் ரத்தத்திலும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். கட்சி தாவும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.