ஹரித்வார்: உத்தரகண்ட் மாநித்தில் பள்ளி மாணவர்களை சாலையில் வைத்து பாடம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில், தனியார் கட்டிடம் ஒன்றில் நடத்துப்பட்டு வந்த பள்ளி ஒன்று கட்டிட உரிமையளரால் தரைமட்டமாக்கப் பட்டதையடுத்து, அப்பள்ளியில் பயின்று வந்த மாணவர்கள் சாலையில் அமர்ந்து பாடம் கவனிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து அப்பள்ளி ஆசிரியர் கூறுகையில், தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வருகையில், கட்டிடம் முழுவதும் இடிக்கப்பட்டிருந்தது, உரிமையாளரிடம் கேட்கையில் அவர் வேறு இடத்தில் பள்ளியை நடத்திக்கொள்ளுமாறு கூறினார். குறிப்பிட்ட கால அவகாசம், முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் இந்த செயல் மிகுந்த வருத்தம் அளிக்கின்றது என தெரிவித்தார்.



இந்நிலையில் வேறு வழி இல்லாமல் மாணவர்களை சாலையில் வைத்து பாடம் எடுக்கும் அவலம் நேர்ந்தது எனவும் தெரிவித்தார்!