உலகமெங்கும் இருந்து இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வது வழக்கம். இஸ்லாமிய மக்களின் 5 கடைமகளில் ஒரு கடமையாக ஹஜ் புனிதப்பயணம் கருதப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் ஹஜ் புனிதப்பயணத்திற்கு அரசு வழங்கிவந்த மானியத்தினை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.


இந்தாண்டு இந்தியாவிலிருந்து ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ளுபவரின் எண்ணிக்கை 1.75 லட்சமாக அதிகரித்துள்ளது. 


முன்னதாக கடந்த 2012–ஆம் ஆண்டு, ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அளிக்கும் மானியத்தை 2022–ம் ஆண்டுக்குள் படிப்படியாக குறைக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 


இதனையடுத்து ஹஜ் பயணம் மேற்கொள்வது பற்றி புதிய கொள்கையை உருவாக்க குழுவையும் அமைத்தது.


இந்நிலையில் இன்று, ஹஜ் புனிதபயணத்திற்கு வழங்கிய மானியத்தை ரத்து செய்தாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக ரத்து செய்யப்பட்ட மானியத் தொகையினை பெண் குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், ஹஜ் பயணம் மேற்கொள்வது பற்றி மத்திய குழு வழங்கிய வரைவு பரிந்துரை கொள்கையின் முக்கிய அம்சமாக ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு கப்பல் வழி பயணம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.