கூகுள், மெர்சடிஸ் போன்ற தானியங்கு மோட்டார் ஜாம்பவன்களின் ஓட்டுனர் இல்லாத கார்களை அறிமுகபடுத்தும் முனைப்பில் உள்ளனர். அதற்கான சோதனை ஓட்டங்களையும் முயற்சித்து வருங்கின்றன. 
இதுகுறித்து இந்திய போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:- 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"ஓட்டுனர் இல்லாத கார்களை அனுமதிக்க இயலாது, அவ்வாறு அறிமுகம் செயும்பட்சத்தில் இந்தியாவில் மக்களின் வேலை பற்றாக்குறைக்கு நாமே வழி வகுத்து கொடுப்பது போல் ஆகிவிடும்" என்று தெரிவித்தார். மேலும் தற்போது இந்தியாவில் 22 லட்சம்  ஓட்டுனர் தட்டுப்பாடு உள்ளது ஆகையால் இந்திய அரசு 100 ஓட்டுனர் பயிற்சி மையங்களை தொடங்க திட்டமிட்டுள்ளது, இதன்முலம் 5 லட்சம் மக்கள் பயனடைவர் எனவும் தெரிவித்தார்.


இதுகுறித்து வல்லுனர்கள் கூறுகையில், பல்வேறு நாடுகளிலும் இத்தகைய தானியங்கு மோட்டார்கள் வந்த பின்னும் வேலை தட்டுபாட்டினை கட்டுபாட்டினுள் வைத்துள்ளனர், அதற்கு சமசீரான மேலன்மையே தேவைப்பாடுகிறது என வலியுறுத்துகின்றனர். இந்திய முன்னற்றத்திற்கு இன்னும் பல அடிகள் எடுத்து வைகவேண்டிய நிலையல் இத்தகு அறிவியல் வரவுகளின் அவசியதையும் நாம் கருத வேண்டும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.