தமிழகத்துக்கு தண்ணீர் இல்லை -கர்நாடக சட்டசபையில் தீர்மானம்
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார்.
டில்லியில் நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியை சந்தித்த சித்தராமைய்யா, காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் சித்தாராமையா வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இன்று காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காகவும் கர்நாடக சட்டசபையின் சிறப்புக்கூட்டம் துவங்கி நடைபெற்றது.
கர்நாடக சட்டசபையில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து அணைகளில் உள்ள தண்ணீரை கர்நாடா குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்துவது எனவும், பெங்களூரு, மைசூரு குடிநீர் தேவைக்கு தான் அணைகளில் தண்ணீர் உள்ளது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.