தொடர்ந்து 4-வது முறையாக ஏற்றம் காணும் LPG சிலிண்டர் விலை!
எண்ணெய் நிறுவனங்கள் LPG விலையை மீண்டும் அதிகரித்துள்ளன. தொடர்ச்சியாக நான்காவது மாதமாக LPG விலையில் இந்த விலை ஏற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது!
எண்ணெய் நிறுவனங்கள் LPG விலையை மீண்டும் அதிகரித்துள்ளன. தொடர்ச்சியாக நான்காவது மாதமாக LPG விலையில் இந்த விலை ஏற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது!
இதுதொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி., 14.2 கிலோ சிலிண்டரின் விலை ரூ.19 உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வுக்குப் பிறகு, டெல்லியில் மானியம் இல்லாமல் 14.2 கிலோ சிலிண்டரின் விலை ரூ.714.00-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டிசம்பரில், 14.2 கிலோ சிலிண்டரின் விலை ரூ.695.00-ஆக இருந்ததை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
வணிக எரிவாயு சிலிண்டர் (19 கிலோ) பற்றி குறிப்பிடுகையில்., அதன் விலை ரூ.30 உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலைகள் அமல்படுத்தப்பட்ட பின்னர், டெல்லியில் வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.1241.00-ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, டிசம்பரில், இதன் விலை ரூ.1211.50-ஆக இருந்தது.
Nonsubsidised 14Kg Gas
Month | Delhi | Kolkata | Mumbai | Chennai | ||||||||||||||||||||||||||
|
அதே நேரத்தில், ஐந்து கிலோகிராம் சிறிய சிலிண்டர்கள் தற்போது ரூ.264.50-க்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விலைகள் ஜனவரி 1 முதல் (இன்று முதல்) நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த புதிய விலைகள் நடைமுறைக்கு வந்த பின்னர் நாட்டின் பிற பல்வேறு மாநிலங்களிலும் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாற்றம் நிகழ்ந்துள்ளது.
Previous Price of 19Kg Gas
Month | Delhi | Kolkata | Mumbai | Chennai | ||||||||||||||||||||||||||
|
கொல்கத்தாவில், மானியமில்லாத உள்நாட்டு சிலிண்டர்களின் விலை ரூ.747.00-ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை சிலிண்டருக்கு ரூ.684.50-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில், சிலிண்டர் ஒன்றின் விலை 734.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வணிக சிலிண்டர் பற்றி பேசுகையில், டெல்லியில் ரூ.1241.00, கொல்கத்தாவில் ரூ.1308.50, மும்பையில் ரூ.1190.00, சென்னையில் ரூ.1363.00-ஆக அதிகரித்துள்ளது.