பீமா கொரிகியான் வன்முறையை கண்டித்து நேற்று மகாராஷ்டிராவில் முழு கடையடைப்பு போராட்டம் நடைப்பெற்றது. இந்த கடையடைப்ப போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் நகரமே தீயில் மூழ்கியது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கலவரத்தில் கிட்டதட்ட 42 பேருந்துக்கள் தீக்கு இரையாகின, வேளான்மை பொருட்கள் வினியோகம் பொருத்தவரையில் வழக்கத்தைவிட 20% காய்கரிகள் வினியோகம் தடைப்பட்டதாக வேளான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சராசரியாக ஐம்பது மாணவர்கள் மட்டுமே வந்திருந்த நிலைபாடு ஏற்பட்ட நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த முழு அடைப்பை தொடர்ந்து, பணிக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 



இந்நிலையில் போராடம் முடிவடைந்த நிலையில் இன்று பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு திரும்பினர். அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போது படிபடியாக திரும்பி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது!