அமெரிக்கா- வட கொரியா இடையே கடந்த 50 ஆண்டுகளாக மோதல் போக்கே நிலவுகிறது. முந்தைய அதிபர் ட்ரம்ப் காலகட்டத்தில் இந்த மோதல் போக்கு சிறிது குறைவாக இருந்ததே ஒழிய, முற்றிலும் சுமுகமான உறவு என கூற இயலாது.  வட கொரியா அமெரிக்காவை தனது எதிரி நாடாகவே கருதி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் (Joe Biden) கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையை நிகழ்த்தினார். இந்த உரையில், வட கொரியா மற்றும் ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அமெரிக்க மற்றும் உலக பாதுகாப்புக்கு "கடுமையான அச்சுறுத்தல்" என்று  தெரிவித்தார்.  இந்த அச்சுறுத்தல்களை அமெரிக்கா தனது கூட்டாளிகளுடன் ராஜீய நிலையில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும் இந்த பிரச்சினைகளை சமாளிக்கும் என்று ஜோ பைடன் வீர வசனம் பேசி இருந்தார்.


இதற்கு பதிலடி வட கொரிய வெளியுறவு அமைச்சக அதிகாரி குவான் ஜாங் கன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தனது  அறிக்கையில்,  "ஜோ பைடன் அவர்களது அறிக்கை, அவர் வட கொரியா எதிரான கொள்கையை கடைபிடிக்க விரும்புகிறார் என்பதை தெளிவாகக் காட்டுகிறது" என்றார். 


சில நாட்களுக்கு முன்பு கூட வட கொரியா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தது. வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் சகோதரியும், அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கும் கிம் யோ ஜாங் , ‘அடுத்த 4 ஆண்டுகளுக்கு  நிம்மதியாக ஆட்சி செய்ய வேண்டும் என்றால் அமெரிக்கா வடகொரியாவை  விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டும் தனது வேலையை பார்க்க வேண்டும்’ என்று எச்சரித்திருந்தார்.


அமெரிக்க அதிபரான ஜோ பிடன், தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதே வட கொரியாவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.  அவர்  வடகொரியாவின் அதிபரும் சர்வாதிகாரியுமான, கிம் ஜாங் உன்னை குண்டர் என்ற வகையில் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ | ஜப்பானை நோக்கி ஏவுகணை ஏவிய கிம் ஜாங் உன்; அமெரிக்காவிற்கு சவால் விடுகிறாரா?


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR