புதுடெல்லி: வடகிழக்கு டெல்லியில் கல் வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பலியான மற்றும் காயம் அடைந்த 200 க்கும் மேற்பட்டவர்களில் 13 வயது சிறுவனும் அடங்குவார். அவர் முதுகில் சுடப்பட்டு இறந்தார். அவரைப் போன்றே வீடு திரும்பிய இரண்டு ஆண்களை ஒரு கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டனர். அதேபோல நான்கு ஆசிட் தாக்குதல் வழக்குகளையும் போலீசார் உறுதிப்படுத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

13 வயதான பைஸி உசேன் திங்களன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மவுஜ்பூருக்கு அருகிலுள்ள விஜய் பூங்காவில் கலவரம் நடந்து வருகிறது எனத் தெரிந்ததும், அவர் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லாமல், என்னதான் நடக்கிறது என பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தால், அந்த இளைஞன் கலவரம் நடக்கும் பகுதிக்கு அருகில் சென்றுள்ளான். சில நிமிடங்களுக்குப் பிறகு, எங்கோ இருந்து வந்த ஒரு புல்லட் அவரது கீழ் முதுகில் தாக்கியது. அங்கேயே அவர் சரிந்தார்.


துப்பாக்கி சூட்டுக்கு ஆளான அந்த இளைஞனை குரு தேக் பகதூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர், கீழ் முதுகெலும்பில் பதிந்திருக்கும் தோட்டாவை அகற்றாமல் இருப்பது தான் புத்திசாலித்தனம். இல்லையென்றால் அவரை காப்பாற்றுவது கடினம் என மருத்துவர்கள் கூறியதாக இளைஞனின் பெற்றோர்கள் கூறினர்.


மேலும் பேசிய அவரின் தந்தை, "எங்கள் குடும்பத்துக்கென ஒரு ஆட்டோரிக்ஷாக் கூட சொந்தமாக இல்லை. அவரை எப்படி காப்பாற்ற போகிறேன் என்ற கவலை அதிகமாக இருந்தது. மேலும் என் மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருந்தது என்று ஹுசைனின் தந்தை முன்னா கூறினார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கல்வீச்சு தாக்குதலுக்கு உள்ளானோம். மகனுக்கு பெருமளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டுக்கொண்டிருந்தது. நான் அவரை இழக்கப் போகிறேன் என்று அஞ்சினேன்" என்று முன்னா கூறினார். 


முதுகெலும்புக்கு அருகே புல்லட் ஆழமாக பதிந்துள்ளதாக மருத்துவர்கள் எங்களிடம் கூறியுள்ளனர். அறுவை சிகிச்சை அவரது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் அவர்கள் கூறினர் என்றார். 


ஒரு தேசிய விளையாட்டு வீரராக வேண்டும் என்ற தனது மகனின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போகிறது என்று தந்தை மிகவும் கவலைப்பட்டார். 


இதுபோன்ற பல சம்பவங்கள் டெல்லி கலவரத்தில் அரங்கேறியுள்ளது. இது மிகவும் வேதனையளிக்கக்கூடியது.