எனது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல் வதந்தி; நான் நலமுடன் இருக்கிறேன், எந்த நோயாலும் பாதிக்கப்படவில்லை என அமித் ஷா விளக்கம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்மையில் பரவிய உடல்நலக்குறைவு குறித்த வதந்திகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிராகரித்தார். இது குறித்த ஒரு ட்வீட்டில், உள்துறை அமைச்சர் பல சமூக ஊடக பயனர்கள் அவரது உடல்நிலை குறித்து ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவதற்கு தளங்களைப் பயன்படுத்தியுள்ளதாகவும், சிலர் அவரது மறைவுக்கு பிரார்த்தனை செய்துள்ளதாகவும் கூறினார்.


இதற்கு விளக்கம் தரும் வண்ணம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "நான் முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கிறேன், எந்த நோயாலும் நான் பாதிக்கப்படவில்லை" என்று ஷா தெரிவித்துள்ளார். 


மேலும், "நாடு தற்போது கொரோனா போன்ற உலகளாவிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது. நாட்டின் உள்துறை அமைச்சராக நான் மும்முரமாக இருப்பதால், இவை அனைத்திலும் நான் கவனம் செலுத்தவில்லை. இது இரவில் தாமதமாக என் கவனத்திற்கு வந்தபோது, இந்த மக்கள் அனைவரும் தங்கள் கற்பனை எண்ணங்களை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தேன். எனவே நான் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை, ”என்று அவர் தெளிவுபடுத்தினார்.



அவரது உடல்நலம் குறித்து அக்கறை காட்டிய நலம் விரும்பிகள் மற்றும் அனைத்து கட்சி ஊழியர்களுக்கும் உள்துறை அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார். 


இதற்கிடையில், ஷாவின் உடல்நிலை குறித்த போலி செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பிய அகமதாபாத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஃபிரோஸ் கான், சர்பராஸ், சஜ்ஜாத் அலி, ஷிராஸ் உசேன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.