மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராதம் 2 ஆயிரம் ரூபாயில் இருந்து பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய சட்டத்திருத்தங்களுடன் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய சட்டத்திருத்தத்தின்படி சாலை விதிகளை மீறினால் ரூ.500 ம், டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5,000 ம், அதிவேகமாக கார் ஓட்டினால் ரூ.2,000 ம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000 ம் மற்றும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1,000 ம் அபராதமாக விதிக்கப்படும். 


விபத்து தொடர்பான காப்பீட்டுத் தொகைகள் திருத்தப்பட்டு, விபத்தில் பலியானோருக்கு பத்து லட்சம் வரை இழப்பீடும், விபத்தில் காயமடைவோருக்கு ஐந்து லட்சம் வரை இழப்பீடும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.