ரபேல் விவகாரத்தில் ராவணனாக மாறிய பிரதமர் நரேந்திர மோடி...
காங்கிரஸ் கட்சியினர் வைத்துள்ள பேனரில் ராகுல் காந்தி ராமராகவும், மோடி ராவணனாகவும் சித்தரித்து வைத்துள்ளன....
காங்கிரஸ் கட்சியினர் வைத்துள்ள பேனரில் ராகுல் காந்தி ராமராகவும், மோடி ராவணனாகவும் சித்தரித்து வைத்துள்ளன....
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு குறித்த காங்கிரஸ் காட்சியின் புகாருக்கு பாஜக தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே இருக்கின்ற நிலையில், தேசிய கட்சிகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் காங்கிரஸ் தொண்டர்கள் சார்பாக வைக்கப்பட்ட பேனர் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் ராகுல்காந்தியை இராமனாகவும் பிரதமர் மோடியை இராவணனாகவும் சித்தரித்துப் பதாகை வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி காங்கிரசையும் அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேபோல ராகுல்காந்தியும் பிரதமர் நரேந்திர மோடியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் காங்கிரஸ் கட்சியினர் வைத்துள்ள பதாகையில் பிரதமர் நரேந்திர மோடியைப் பத்துத் தலை இராவணனாகவும், ராகுல்காந்தியை இராமனாகவும் சித்தரித்துள்ளனர். ரபேல் போர் விமானத்தின் படமும் அந்தப் பதாகையில் இடம்பெற்றுள்ளது.