காசியாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் அறிவிப்பின்படி, வளர்ப்பு நாயை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இப்போது நாய் பதிவு செய்யாதவர்கள் மீது நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முனிசிபல் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. நகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின்படி, காசியாபாத் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளரும் செல்ல நாய்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். நாய் பதிவுக்கு 1000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Amit Shah on Hijab: நீதிமன்ற உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் - அமித் ஷா


காசியாபாத் முனிசிபல் கார்ப்பரேஷனில் வளர்ப்பு நாய்களின் தரவுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக செல்லப் பிராணிகளுக்காக பிரத்யேக திட்டங்களை தயாரிக்க இந்த அறிக்கை உதவும் என காஷியாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன்,  ஆணையர் மகேந்திர சிங் தன்வார் தெரிவித்தார். இதற்கான உத்தரவு, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 31 வரை பதிவு செய்துள்ள நாய் உரிமையாளர்களுக்கு ஒரு நாய்க்கு 1000 ரூபாய் மட்டுமே பதிவு கட்டணம். ஆனால் மார்ச் 31 -க்குப் பிறகு பதிவு கட்டணம் 1500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது என்று துணை முதன்மை கால்நடை மற்றும் நல அலுவலர் டாக்டர் அனுஜ் குமார் சிங் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | இந்து இளைஞர் படுகொலை; ஷிவமோகாவில் 144 தடை உத்தரவு அமல்!


மே 1-ம் தேதிக்குள் வளர்ப்பு நாயை பதிவு செய்யாதவர்களுக்கு தினமும் ரூ.50 கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. ஆன்லைன் வழியாகவும் வளர்ப்பு நாய்களை பதிவு செய்து கொள்ளலாம். பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள காஷியாபாத் முனிஷிபல் கார்ப்பரேஷன் செல்லப்பிராணி செயலியில் வளர்ப்பு நாய் குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும், தொடர்பான தகவல்களுக்கு, 7827459535, 8178016949 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR