NRC முழு நாட்டிலும் செயல்படுத்தப்படாது என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மராட்டிய முதல்-மந்திரியும் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே முதல் முறையாக இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். மேலும் இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து அவர் பிரதமருடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  உத்தவ் தாக்கரே மகனுமான ஆதித்யா தாக்கரேவும் இச்சந்திப்பின் போது உடன் இருந்தார்.


தாக்கரே, மகன் ஆதித்யாவுடன், தேசிய தலைநகரில் பிரதமர் மோடியை சந்தித்து, அசாமில் மட்டுமே என்.ஆர்.சி செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார் என்றார். 


குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்) குறித்து யாரும் பயப்படத் தேவையில்லை என்று அவர் மேலும் கூறினார். NPR என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பு. தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்) யாரையும் நாட்டிலிருந்து வெளியேற்றப் போவதில்லை.


மகாராஷ்டிரா முதல்வர் அனைத்து ஒத்துழைப்பையும் மகாராஷ்டிரா அரசுக்கு வழங்குவதாக பிரதமர் மோடி உறுதியளித்ததாக மகாராஷ்டிர முதல்வர் கூறினார். மகாராஷ்டிரா தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரதமருடன் நல்ல கலந்துரையாதாக முதல்வர் தாக்கரே கூறினார்.


மகாராஷ்டிரா முதல்வர் பதவியேற்ற பின்னர் உத்தவ் தாக்கரே டெல்லிக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கவுள்ள மகாராஷ்டிராவின் சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக உத்தவ் மற்றும் மோடி இடையேயான சந்திப்பு இதுவாகும்.