OBC தலைவர் அல்பேஷ் தாகூர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்!!
ஓ.பி.சி. தலைவர் அல்பேஷ் தாகூர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுகிறார்!!
ஓ.பி.சி. தலைவர் அல்பேஷ் தாகூர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுகிறார்!!
மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில் தேசிய கட்சிகள் அனைத்தும் தீவிர பிரட்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்நிலையில், ராகுல் போட்டியிடும் வயநாடு தொகுதியில் கடந்த வாரம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, இன்று அமேதி மக்களவை தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் தாகூா் சமூக தலைவரும், எம்எல்ஏவுமான அல்பேஷ் தாகூா் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினாா். குஜராத் மாநிலத்தில் தாகூா் சமூக மக்களுக்கு உாிய இடஒதுக்கீடு உள்ளிட்ட கோாிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியவா் அல்பேஷ் தாகூா். கடந்த மாதம் இவா் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைய போவதாக பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் நாளை முதல் கட்டமாக மக்களவை தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அல்பேஷ் தாகூா் இன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளாா். இது குறித்து செய்தியாளா்களிடம் பேசிய அவா், காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டதால் தான் பதவி விலகியதாக அவா் தொிவித்தாா். மேலும் தனது சமூக மக்களின் உாிமைகளுக்காக தொடா்ந்து போராட போவதாகவும், வரும் மக்களவை தோ்தலில் தான் போட்டியிட போவதில்லை என்றும் அவா் கூறியுள்ளாா்.