கொல்கத்தா மருத்துவர் கொலை: 4 மனைவிகள்... ஆபாச பட அடிமை - குற்றவாளியின் பகீர் பின்னணி!
Kolkatta Woman Doctor Murder: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் ஒருவரை கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றவாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர் குறித்து அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
Kolkatta Woman Doctor Murder: கொல்கத்தாவில் உள்ள அரசின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், 31 வயதான முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை காலையில் அவரது உடலை மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் சக மாணவர்கள் கண்டறிந்ததை தொடர்ந்து அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அந்த பெண்ணை அரை நிர்வாண கோலத்தில் மாணவர்கள் கண்டறிந்ததாக போலீசார் கூறுகின்றனர். மேலும், உயிரிழந்த அந்த மாணவியை உடற்கூராய்வு செய்ததில் அவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி, அதன்பின் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. இந்த கொலை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
சிசிடிவியும், ப்ளுடூத் ஹெட்போனும்
இந்த குழு அமைக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே சஞ்சய் ராய் அந்த மருத்துவமனையில் குடிமைத் தன்னார்வ பணியாளர் (Civic Volunteer) ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது வயது 33. கொலை நடந்த இரவில் அந்த பெண் மருத்துவர் இரவு பணியில் (Night Shift) இருந்துள்ளார். அப்போது அதிகாலை 4 மணியளவில் அவசரகால சிகிச்சை பிரிவின் கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் அந்த பெண்ணிடம் சஞ்சய் ராய் பாலியல் ரீதியாக அத்துமீறி கொலை செய்திருக்கிறார் என போலீசார் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | இமாச்சலில் திடீர் வெள்ளம்... காரில் பயணித்த 9 பேர் உயிரிழந்த சோகம்!
அந்த கருத்தரங்கு கூடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சஞ்சய் ராயின் கைதுக்கு முக்கிய காரணமாகும். சிசிடிவி காட்சிகளில் அதிகாலையில் அந்த கட்டடத்திற்குள் சஞ்சய் ராய் வரும்போது அவரின் காதில் ப்ளுடூத் ஹெட்போன் இருந்தது. ஆனால், 40 நிமிடங்கள் கழித்து அந்த கட்டடத்தில் இருந்து வெளியேறியபோது அவரது காதில் அந்த ஹெட்போன் இல்லை. சிசிடிவி மற்றும் ஹெட்போன்தான் அவரை காட்டிக்கொடுத்தன. சஞ்சய் ராய் கடந்த 2019இல் கொல்கத்தா காவல் துறையில் பேரிடர் மேலாண்மை குழுவில் தன்னார்வ பணியாளராக சேர்ந்துள்ளார். அதன்பின் கொல்கத்தா காவல் துறையில் உள்ள நல்வாழ்வு பிரிவுக்கு மாற்றமடைந்துள்ளார்.
4 முறை திருமணம்
சஞ்சய் ராய்க்கு 4 முறை திருமணம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, அவரது முதல் மூன்று மனைவிகளும் அவரின் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமையை தாங்கமுடியாமல் பிரிந்துசென்றுவிட்டதாகவும், நான்காவது மனைவி கடந்தாண்டு புற்றுநோயால் உயிரிழந்தார் என்றும் விசாரணையில் தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும், சஞ்சாய் ராயின் தாயார் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுக்கிறார். தனது மகன் குற்றம் ஏதும் செய்யவில்லை என்றும் போலீசாரின் நிர்பந்தத்தின் காரணமாகவே குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
மாமியார் வைத்த குற்றச்சாட்டு
சஞ்சாய் ராயின் மாமியார் இவர் மீது பங்கீரங்க குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார். அதில், "எனது மகளை திருமணம் செய்துகொண்டபோது அவனின் முந்தைய திருமணங்கள் குறித்த உண்மையை மறைத்துவிட்டான். அதற்கு பின்னரே சஞ்சய் குறித்து எங்களுக்கு தெரிய வந்தது. எனது மகளை அடித்து சித்ரவதை செய்தது குறித்து போலீசாரிடம் முன்பு ஒருமுறை புகார் அளித்திருந்தோம்" என கூறினார். பலருக்கும் லஞ்சம் அளித்தே காவல் துறையில் இந்த பணியை அவர் பெற்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.
ஆபாச பட அடிமை
மேலும், போலீசார் சஞ்சய் ராயை கைது செய்த பின்னர் அவரின் செல்போனை ஆய்வு செய்ததில் அவர் வன்முறை மிக்க ஆபாச படங்களை பார்த்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில்,"கொலை நடந்த இரவில் சஞ்சய் ராய் மது அருந்தி உள்ளார். மருத்துவமனையில் மது அருந்தியவாறு வன்முறை மிக்க ஆபாச படங்களை பார்த்திருக்கிறார். அவரது மொபைல் முழுவதும் ஆபாச படங்கள் நிரம்பி வழிகின்றன" என்றனர்.
மேலும் படிக்க | ராகுல்காந்தி ஒரு விஷமி என கங்கனா ராவத் விமர்சனம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ