டெல்லியில் ஒருநாள் விட்டு ஒருநாள் வாகனத்தை இயக்கும் திட்டம் அடுத்த வாரம் முதல் மீண்டும் நடைமுறை படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்-ஈவன் முறையில் வாகனங்களை இயக்கும் திட்டம் வரும் நவம்பர் 13 முதல் துவங்கி 5 நாள் வரை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக டெல்லி அமைச்சர் கெலாட் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு பிரச்சனையை குறைக்க இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசு அதிகமாக ஏற்பட்டு வருகிறது. டெல்லி அரசும் இதை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் நிலவி வரும் காற்று மாசு காரணமாக அங்கு உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


டெல்லியில் காற்று மாசுடன் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது. காற்று மாசுடன் கூடிய அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். 


இந்நிலையில் வரும் 13-ம் தேதியிலிருந்து 17-ம் தேதி வரை டெல்லியில் (ஆட்-ஈவன்) ஒருநாள் விட்டு ஒருநாள் வாகனத்தை இயக்கும் திட்டம் நடைமுறை படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.