முன்னாள் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றிய காதலன் கைது...
தனது முன்னாள் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக, ஒடிசாவை சேர்ந்த 26 வயது இளைஞரை தர்மசாலா காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
தனது முன்னாள் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக, ஒடிசாவை சேர்ந்த 26 வயது இளைஞரை தர்மசாலா காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை அளித்த புகாரின்படி, ஜெய்சுங்குடா கிராமத்தில் வசிக்கும் குற்றம் சாட்டப்பட்ட சமீர் குமார் ஜீனா கைது செய்யப்பட்டுள்ளார். தகவல்கள் படி கடந்த ஆண்டு +3 இறுதி படித்தபோது பாதிக்கப்பட்ட மாணவியை சமீர் குமார் ஜீனா சந்தித்திருந்தார். முதல் சந்திப்பின் போதே ஜீனா பாதிக்கப்பட்ட பெண்ணின் தொலைபேசி எண்ணை பெற்றுள்ளார். தொடர்ந்து இருவரும் நண்பர்களாக பேசி, பின்னர் காதலர்களாக மாறியுள்ளனர்.
READ | மதுபானங்களுக்கான 'Covid-19 சிறப்பு கட்டணத்தை' குறைக்க அரசுக்கு கோரிக்கை!!
காதலர்கள் பின்னர் அந்தரங்க வாழ்க்கை வரை பயணித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை ஜீனா, இருவரும் தனிமையில் இருந்த போது எடுத்த புகைப்படங்கள், மற்றும் வீடியோவை வைத்து மிரட்டி வந்ததாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அவருடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜீனா இளம்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இது கடந்த வாரம் சமூக ஊடகங்களில் தனது அந்தரங்க புகைப்படங்களை பார்த்த இளம்பெண் தனது தந்தையுடன் காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
READ | வீடு தேடி வரும் மதுபானம்... இனி Amazon மற்றும் BigBasket பயன்பாட்டிலும்!...
காவலத்துறை விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் மைனர் பெண் என தெரியவந்துள்ளது. இதையடுத்து 18 வயது நிறம்பாத சிறுமியை உடலுறவுக்கு தூண்டியது, ஆபாச படங்களை கொண்டு பாலியல் தூண்டலுக்கு உட்படுத்தியது என ஜீன மீது காவல்துறையினர் புகார் பதிவு செய்துள்ளனர்.
புகாரை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இந்த விவகாரத்தில் விசாரணையைத் தொடங்கினர். குற்றம் சாட்டப்பட்டவர் மீது IPC மற்றும் IT சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.