32 விரல் கொண்ட பாட்டியை சூனியக்காரி என முத்திரை குத்தி ஒதுக்கிவைத்த உறவினர்கள்..!
32 விரல்களுடன் பிறந்த பெண் ஒருவர் தற்போது தன்னுடைய 63 வயதில் சூனியக்காரி என்ற முத்திரை குத்தப்பட்டு, உறவினர்களால் ஒதுக்கப்பட்ட கொடுமை!!
32 விரல்களுடன் பிறந்த பெண் ஒருவர் தற்போது தன்னுடைய 63 வயதில் சூனியக்காரி என்ற முத்திரை குத்தப்பட்டு, உறவினர்களால் ஒதுக்கப்பட்ட கொடுமை!!
ஒரு சிலர் பிறவியிலேயே கைகளில் கூடுதல் விரல்களுடன் பிறப்பார்கள். சிலருக்கு ஒரு கையில் ஆறாவது விரல் இருக்கும். இன்னும் சிலருக்கோ இரு கைகளிலும் ஆறு விரல் இருக்கும். இவர்களை சிலர் அதிஷ்டசாலி என்பார்கள். சிலர் அதீத வளர்ச்சி உடையவர்கள் என்பார்கள். இந்நிலையில், ஒடிசாவின் கஞ்சாம் என்ற மாவட்டத்தில் உள்ள கடபாடா கிராமத்தில் வசித்து வரும் 63 வயது மூதாட்டி நாயக் குமாரி. இவருக்கு பிறவியிலேயே 12 கை விரல்கள், இரு கால்களிலும் தலா 10 என 20 விரல்கள் அமைந்துள்ளது.
ஆனால் பிறக்கும் போதே இந்த உடலமைப்புடன் பிறந்த நாயக் குமாரியை, அவ்வூர் மக்கள் சூனியக்காரி என்று முத்திரையிட்டு தங்களுடன் சேர்த்து கொள்ளாமல் ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் அவர் பிறந்தது முதல் பிறருடன் சகஜமாக பழக முடியாமல் வேதனை அடைந்துள்ளர். தன் வேதனை நிறைந்த வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டுள்ள நாயக் குமாரி, தன்னுடைய கை மற்றும் கால்களில் உள்ள கூடுதல் விரல்கள் பிறவி குறைபாடு. ஆனால் எங்கள் ஊரில் வசிக்கும் மூடநம்பிக்கை நிறைந்த மக்கள் இதை சற்றும் யோசிக்க மறுக்கிறார்கள்.
என்னிடம் உள்ள இந்த குறையை சரி செய்ய எனக்கு போதிய பொருளாதார வசதி இல்லை. என்னை சுற்றி வசிப்பவர்கள் என்னை ஒரு சூனியக்காரி என்றே நம்புகிறார்கள். ஆகவே என்னை ஒதுக்கி வைக்கிறார்கள். ஊர் மக்கள் என்னை சூனியக்காரி என்று ஒதுக்கி வைப்பது மிகுந்த வேதனையாக இருக்கிறது என்று நாயக் குமாரி தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் என்னை வித்தியாசமாக பார்க்கும் பார்வையை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. அவர்களின் பார்வையிலிருந்து தப்பிக்கவே பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழலில் தவிப்பதாக குறிப்பிட்டார்.
மூதாட்டி நாயக் குமாரியின் பிறவி குறைபாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், இது மரபணு மாற்றங்களால் ஏற்பட்டுள்ள பிறவிக் குறைப்பாடு. இது மாதிரியான குறை 5,000 பேரில் ஒருவருக்கு ஏற்படுவதாக கூறியுள்ளனர்.